மத்திய உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்தனர்.
பின்னர் பேட்டியளித்த பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மத்திய உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய ஆ. ராசா மீது வழக்குப்பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
















