என்பிடி எனப்படும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்து எனப் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ஐரோப்பா ஒன்றியத்தின் மாநாட்டில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மேக்ரான், ஈரான் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் சிறப்பான ஒன்று எனவும், ஆனால் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து ஈரான் வெளியேறுவது மோசமானது என்றும் கூறினார்.
மேலும், இது இந்த அமைப்பைப் பலவீனப்படுத்துவதாக அமைந்து விடும் எனக் கூறிய மேக்ரான், அணு ஆயுதங்கள் உற்பத்தியை ஈரான் மீண்டும் தொடங்குவதைத் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.