திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாகப் பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமைத் தள்ளுபடி செய்யப்பட்டது.
அப்போது வழக்கு தொடர்பாகப் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பூவை ஜெகன்மூர்த்தியை நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில் ஆண்டர்சன்பேட்டையில் அமைந்துள்ள பூவை ஜெகன் மூர்த்தியின் இல்லத்திற்குச் சிபிசிஐடி போலீசார்ச் சென்றுள்ளனர்.
அப்போது பூவை ஜெகன் மூர்த்தி அவரது வீட்டில் இல்லை என்பது சிபிசிஐடி போலீசாருக்குத் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவானதாகவும், அவரைக் கைது செய்யச் சிபிசிஐடி போலீசார்த் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.