ஆச்சாரியா வித்யானந்த் மகராஜின் 100 ஆவது பிறந்த நாள் விழாவில், பிரதமர் மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஆச்சாரியா வித்யானந்த் மகராஜின் நூற்றாண்டு விழாவைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த விழாவை மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம் மற்றும் பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளை இணைந்து நடத்துகிறது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.