விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிப்படைத்தன்மையைக் கருதியும், தவறான தகவல் பரப்பப்படுவதைத் தடுக்கவும் இந்த விளக்கம் அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற தகவல்களை வெளியிட வேண்டாம் என மத்திய அமைச்சகம் எச்சரித்துள்ளது.