தேனி மாவட்டம், மார்க்கையன்கோட்டையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் திமுக நிர்வாகியைக் கத்தியால் குத்தி கொன்ற மூவரைப் போலீசார் கைது செய்தனர்.
மார்க்கையன் கோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், திமுகவில் பேரூர் இளைஞர் அணி துணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார்.
இவருக்கும், சின்னமனூரைச் சேர்ந்த சுருளிமணி என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த சுருளிமணி தனது உறவினர்களுடன் சேர்ந்து பிரபாகரனைக் கத்தியால் குத்தியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரபாகரனை மீட்டு சின்னமனூர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்துச் சுருளிமணி, அவரது உறவினர்களான முத்துராஜ் மற்றும் பிரபாகரன் ஆகிய மூவரைச் சின்னமனூர் போலீசார்க் கைது செய்தனர்.