முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!
Aug 16, 2025, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

Web Desk by Web Desk
Jun 30, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கொளத்தூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பதாக புகார் எழுந்திருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியில் வசிக்கும் மக்கள் படும் இன்னல்களை இந்த செய்தி தொகுப்பின் மூலம் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை கொளத்தூர் பாரத் ராஜிவ்காந்தி நகரில் சுமார் 500க்கும் அதிகமான குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அரசால் புறம்போக்கு நிலம் என அறிவிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் பல ஆண்டுகளாகக் குடியிருக்கும் பொதுமக்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம் என அனைத்துவிதமான வரிகளையும் கட்டணங்களையும் முறையாகச் செலுத்தி வருகின்றனர்.

பட்டாவும் விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் திடீரென தனிநபர் ஒருவரின் நிலம் எனக்கூறி, ஆண்டாண்டு காலமாக அங்குக் குடியிருக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி நடப்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேடும், பள்ளமுமாக காட்சியளித்த பொறம்போக்கு நிலத்தைச் சமன்படுத்தி, தாங்கள் சேர்த்த சொத்துக்கள் முழுவதையும் விற்று வீடுகளை கட்டி குடியிருந்து வரும் நிலையில் திடீரெனெ தங்களை வெளியேறச் செல்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நிலம் தனியாருக்குச் சொந்தமானது என்றால் மாநகராட்சி சார்பில் வடிகால் பணிகள் எதன் அடிப்படையில் நடைபெற்றது எனவும் ? 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொறம்போக்கு நிலமாக இருந்த இடம் தற்போது தனிநபருக்குச் சொந்தமாக மாறியது என அப்பகுதி மக்கள் அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்புகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பது தமிழக அரசின் மற்றொரு மோசமான முகத்தை வெளிப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த இடத்தை விட்டு வெளியேற வற்புறுத்தினால் போராட்டத்தில் ஈடுபடவும் தயங்க மாட்டோம் என பாரத் ராஜிவ் காந்தி நகர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: cm stalinTragedy in the Chief Minister's constituency: Attempt to evict people who have been living there for 40 yearsமுதலமைச்சர் தொகுதியில் துயரம்மக்களை வெளியேற்ற முயற்சிசென்னை கொளத்தூர்DMK
ShareTweetSendShare
Previous Post

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

Next Post

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

Related News

நெல்லை : இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

தீயவைகள் அழிந்து, நன்மைகள் பெருக வேண்டும் – அண்ணாமலை கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!

அலட்சியம் காட்டும் தமிழக அரசு : விமானங்கள் மீது பறவைகள் மோதும் அபாயத்தால் அச்சம்!

நாகரீகமான அரசியலுக்கு வழிமுறை ஏற்படுத்தியவர் இல.கணேசன் : தமிழிசை புகழாரம்!

கிருஷ்ண ஜெயந்தி – கிருஷ்ணர் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

ஆர்.ஆர்.எஸ்., முதல் ஆளுநர் வரை – இல.கணேசன் கடந்து வந்த பாதை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனா : குடைக்குள் ஏர்கூலர் – குடை விற்பனை!

ஆஸ்திரேலியா : இந்திய தூதரகத்திற்கு வெளியே சுதந்திர தின கொண்டாட்டம் – இந்தியர்கள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம்!

சீனா : ரோபோ ஒலிம்பிக் – மனிதர்களுக்கு சவால் விடும் ரோபோக்கள்!

ரஷ்ய அதிபர் புதின் தன்னை சந்திக்க சம்மதம் தெரிவித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!

வாஜ்பாய் நினைவு தினம் – நினைவுடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை!

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies