திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா, யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்குகிறது.
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வரும் 7ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.
இதற்காக கோயில் ராஜகோபுரம் முன் எட்டாயிரம் சதுரஅடி பரப்பளவில் 76 வேள்வி குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கும் குடமுழுக்கு விழாவில், காலை – மாலை என
12 கால யாகசாலை வேள்வி பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில் தங்கநிற அட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட யாகசாலை, மின்னொளியில் ஜொலிப்பது பக்தர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.