திருப்புவனம் லாக்கப் மரண வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மனித உரிமை ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், இளைஞர் அஜித்குமார் மரண வழக்கை விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் நடந்த காவல் மரணங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்க வேண்டும் என்றும்,
காவல் துறை விசாரணையில் மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.