வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவார் என ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இதனையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 3-ந் தேதி தொடங்குகிறது. கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் விலகியிருந்தார்.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.