திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு என்பவர், கடிதம் அனுப்பியுள்ளார்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், 6 போலீசார் கடுமையாகத் தாக்கியதால் உயிரிழந்ததாகக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் உண்மை மூடிமறைக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். சம்பவம் நடந்ததும் அமைச்சர் பெரிய கருப்பன், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாகவும், அரசியல் கட்சியினர் மற்றும் ஊடகத்தினர் என யாரும் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை நெருங்க அனுமதிக்கப்படவில்லை எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.