திருப்பூர் மாநகராட்சியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குளத்துபுதூர் நியாய விலை கடையில் எப்போது சென்றாலும் பொருட்கள் இல்லை என ஊழியர்கள் தெரிவிப்பதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பொருட்கள் வழங்க வேண்டி உள்ளதால் இதுபோன்ற நிலை ஏற்படுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.