சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, விதிகளை மீறி குவாரி நடத்தி, 6 பேர் மரணத்திற்குக் காரணமான குவாரி உரிமையாளர் மேகவர்மன் மற்றும் மேலாளர் ராஜசேகரன் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, முன்ஜாமின் வழங்கியது.
மனுதாரர்கள், சிங்கம்புணரி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணைய பத்திரம் செலுத்த வேண்டும் என்றும், S.S.கோட்டை காவல் நிலையத்தில் நாள்தோறும் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், வழக்கில் சாட்சிகளை மிரட்டக்கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டது.