திண்டுக்கல் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் மர்மநபர்கள் மனித கழிவைக் கலந்ததாகக் கூறி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் மூவேந்தர் புலிப்படை சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதில் நல்லமானார் கோட்டை ஊராட்சி தொட்டனம்பட்டி கிழக்குத் தெருவில், ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவுகளைக் கலந்து அசுத்தம் செய்ததாகவும், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.