கோவை தொண்டாமுத்தூர் அருகே விவசாய தோட்டத்தில் இருந்து தொடர்ந்து மோட்டார் வயர்கள் திருடப்படுவதை அடுத்து போலீசாருடன் இணைந்து விவசாயிகளும் ரோந்து பணியில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மோட்டர் காப்பர் வயர் திருடப்படுவது தொடர்பாக தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று புகார் அளித்தனர்.
அப்போது விவசாயிகள் மற்றும் போலீசார் இணைந்து வாட்சப் குழு அமைத்து, ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைந்த வாட்சப்குழுவில் அவ்வப்போது தகவல்கள் பரிமாரப்பட உள்ளதாகத் தெரிவித்தனர்.