எதிரிகளின் பதுங்கு குழிகளைத் தாக்கி அழிக்கும் வகையில் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வருகிறது.
அக்னி-5ன் புதிய பதிப்பாக இந்த பங்கர் பஸ்டர் ஏவுகணையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
அக்னி-5 ஏவுகணை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது என்றும், இதன் புதிய பதிப்பாக 2 புதிய வகை ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பங்கர் பஸ்டர் ரக ஏவுகணை, நிலத்திற்கு அடியில் உள்ள எதிரிகளின் தளங்களைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், 80 முதல் 100 மீட்டர் ஆழம் வரை சென்று தாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரைக்கு மேலே உள்ள இலக்குகளைத் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கும் வகையில் மற்றொரு ஏவுகணையும் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.