ராணிப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய “ஸ்மார்ட் கிளாஸ்” வகுப்புகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி அரசு பள்ளி மாணவர்கள் அசத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய “ஸ்மார்ட் கிளாஸ்” வகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
அதில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் மழலை குழந்தைகள் அனைவருக்கும் வகுப்பு வாரியாக சுழற்சி முறையில் “ஸ்மார்ட் கிளாஸ்” வாயிலாகக் கல்வி கற்றுத் தரப்படுகிறது.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கணினி கையாளும் முறை போன்றவையும் கற்றுத் தரப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.