மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த ஆலங்குளம் ஊராட்சியில் குடிநீர் வழங்காதபோதும் வரி கேட்கும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குளம் பகுதியில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளிலும் கடந்த ஓராண்டுக்கு முன்பு குழாய்கள் அமைக்கப்பட்டன.
இருப்பினும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், வழங்காத குடிநீருக்கு வரி செலுத்த ஊராட்சி நிர்வாகம் வற்புறுத்துவதாகவும், வரி செலுத்த மறுப்பு தெரிவித்தால் 100 நாள் வேலை கொடுக்காமல் அலைக்கழிப்பதாகவும் குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.