திமுக ஆட்சியில் இதுவரை 25 லாக்-அப் மரணங்கள் ஏற்பட்டு இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசாங்கம் மிக மிக மோசமான நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.அஜித்தின் மரணத்தை கொலையாகத்தான் கருத முடியும் என்றும் அவர் கூறினார்.
வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து ஆழமாக பேசுவது பொருத்தமாக இருக்காது என கருதுகிறேன் என்றும், இருந்தாலும் கோவில் காவலரை விசாரணைக்காக அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதில் உயிரிழந்ததாக பத்திரிகையிலும் ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன என்றும். இது குறித்து நீதிமன்றம் காவல்துறையினர் செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளதாக தெரிவித்துளளது.
அஜித்குமாரின் உடலில் பல இடங்களில் காயம் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதாகவும், ஆகவே இது ஒரு கொலையாகத்தான் பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.