உத்தரப்பிரதேசத்தில் கனமழை காரணமாக யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் அரைல் காட் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் யமுனை நதியின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர்ந்து உயரும் நீர்மட்டத்தால் மக்கள் பாதுகாப்பாக நீராடக் கரையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பாக நீராடும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.