மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் அமைந்துள்ள தொழிற்சாலையில், இரவில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
பைராகர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையிலிருந்து, கரும்புகை வெளியேறியது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
அதற்குள் தீ மளமளவெனத் தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதனால் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.