கர்நாடகாவில் விவசாயியைத் தாக்கிய சிறுத்தையைக் கிராம மக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
சிக்கபள்ளாபுரா மாவட்டம் கண்டிபண்டே தாலுகாவில் சொக்கனஹள்ளி ஏரி அருகே ராமகிருஷ்ணப்பா என்பவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை திடீரென சிறுத்தை தாக்கியது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கி வந்த கிராம மக்கள், மலைப்பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தையைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.