ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்குச் செல்லும் பாலம் திடீரென உடைந்ததால் தண்ணீர் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.
மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்குச் செல்வதற்காகக் கடலுக்கு நடுவே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஆண்டுக் காலம் ஆனதால் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் பாலம் உள்ளது.
இந்த நிலையில், அந்த வழியே தண்ணீர் ஏற்றிச் சென்ற வாகனத்தின் பாரம் தாங்க முடியாமல் பாலம் உடைந்தது. இதனால் வாகனம் விபத்துக்குள்ளானது.
நல்வாய்ப்பாக ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அப்பகுதியில், புதிய பாலம் கட்டி தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.