விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ₹1894 கோடி மதிப்பீட்டில் பி.எம் மித்ரா ஜவுளி பூங்கா அமைக்க பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவித்து, பல லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் இத்தகைய சீரிய திட்டத்தால், விருதுநகர் பகுதி மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகமும் பொருளாதார ரீதியாக முன்னேறும் என்பது திண்ணம். என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் நமது மத்திய அரசு கொண்டுள்ள அக்கறையை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்க ஒப்புதல் அளித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.