ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியில் இருந்து 20 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு முழுமையாக சரிந்துள்ளது. கடந்த வாரம் வினாடிக்கு 88 ஆயிரம் கனஅடி வரை காணப்பட்ட நீர்வரத்து, படிப்படியாக சரிந்து வந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நேற்றிரவு வரை 43 ஆயிரம் கனஅடியாக காணப்பட்ட நீர்வரத்து தற்போது 20 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சீரான நீர்வரத்து காணப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதனால், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.