கோவை கிட்டாம்பாளையம் BSF முகாம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கிட்டம்பாளையம் எல்லை பாதுகாப்பு படை முகாம் வளாகத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
நிர்வாக காரணங்களால் பள்ளி துவங்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, இதுதொடர்பாக மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.
இந்நிலையில், BSF முகாம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.