வரும் 7-ம் தேதி முதல் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 7-ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் மக்களைக் காப்போம் சுற்றுப்பயணத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், சுற்றுப்பயணத்தின்போது மாவட்ட வாரியாக உள்ள பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.