ஈரான் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஈரான், இஸ்ரேல் இடையே 10 நாட்களுக்கும் மேலாகப் போர் நீடித்து இருந்தது. இந்த போரினால் இரு நாட்டிற்கும் ஏராளமான இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகளை ஈரான் வெளியிட்டுள்ளது.
கட்டங்கள் சிதறும் காட்சியும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தூக்கி வீசப்படும் காட்சியும் நெஞ்சைப் பதைபதைக்க வைத்துள்ளது.