மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் டெத் வழக்கில் தனி நீதிபதியின் 3-வது நாள் விசாரணையில் மரணத்தை உறுதி செய்த மருத்துவர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அஜித்குமார் மரண வழக்கு விசாரணை அதிகாரியாக மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நியமிக்கப்பட்டார்.
வழக்கு தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்கவும், சாட்சியங்களிடம் விசாரணை நடத்தவும் மதுரை அமர்வு ஆணையிட்டது.
அதன்படி, திருப்புவனம் காவல் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான ஆய்வு மாளிகையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், தொடர்ந்து இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினார்.
3-வது நாளாக இன்று தொடங்கிய விசாரணையில், மரணத்தை உறுதி செய்த திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி நீதிபதியிடம் சாட்சியம் அளித்தார்.