தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் காலதாமதம் ஏற்படுத்தும் அதிகாரிகளை, மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் குமார் கடுமையாக எச்சரித்தார்.
புதூர் பகுதியில் அம்ரித் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சுத்திகரிப்பு நிலைய பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் குமார், பணிகளை முடிக்கக் காலதாமதம் ஏற்படுவது ஏன்? எனச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேள்வி எழுப்பினார்.
மக்கள் பணி மேற்கொள்ள ஏன் இவ்வளவு தயக்கம் என அதிகாரிகளிடம் வினவிய அவர், முடிந்தால் பணி செய்யுங்கள் இல்லையெனில் கிளம்புங்கள் எனக் கண்டிப்புடன் கூறினார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் அதிகாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.