வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் சேர்த்தது.
245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 35 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது.