ராமநாதபுரத்தில் ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வில் முன்னுரிமை மறுக்கப்பட்டதாகக் கூறி, ஆசிரியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் தனியார் பள்ளியில் முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இதில் காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் கணிதவியல் ஆசிரியர் சீனிவாசனுக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த சீனிவாசன், பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். பள்ளி வளாகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் போலீசார், அவர் மீது தண்ணீரை ஊற்றித் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.