சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் 70 முதல் 80 சதவீதம் நிறைவு பெற்றிருப்பதாகத் துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் நடைபாதை சீரமைப்பு பணிகளை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மழை, கடல் காற்றால் பாதிக்கப்படாத வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய மரப்பலகை அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த நடைபாதையைப் பொதுமக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்திய அவர், சென்னையில் புதிதாக 763 3D பேருந்து நிலையத்திற்கான பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.