தென்காசி மாவட்டம் கடையம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவியாக ராமலட்சுமி பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சங்கிலிபூதத்தான் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, ஊராட்சி மன்றத் தலைவரிடமும் மனு அளித்தனர்.