கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து நாளை மறுநாள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் இபிஎஸ் அதற்கான லோகோ மற்றும் பாடலை வெளியிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில், சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளார்.
மேட்டுப்பாளையத்திலிருந்து நாளை மறுநாள் தொடங்கும் இந்த சுற்றுப்பயணத்திற்கான லோகோ மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.
இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் சுற்றுப்பயணத்திற்கான லோகோ மற்றும் பாடலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.