நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள முத்தமிழ்நகரில் சுற்றித் திரிந்த ஒற்றைக்காட்டு யானை கார் ஒன்றை முட்டி சேதப்படுத்தியது.
இதனால் கூடலூரில் இருந்து சுல்தான் பத்தேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவத்தால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் யானையை உடனே வனத்துக்குள் விரட்டக் கோரிக்கை விடுத்துள்ளனர்.