ராமநாதபுரத்தில் கோயில் நிலஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலிநோக்கம் கிராமத்தில் சாத்தப்பன் அய்யனார் கோயிலுக்குச் சொந்தமாக நிலம் உள்ளதாகவும், இதனை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்ய வேண்டும் என கடலாடி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டது.
அதன்படி நீண்ட நாட்களுக்குபின் நிலத்தை அதிகாரிகள் அளக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதி மக்களுக்கும், முஸ்லிம் நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. கோயில் நிலம் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.