டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகாழாரம் சூடடியுள்ளனர்.
எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளில், பாரதீய ஜன சங்கத்தின் நிறுவனர் – தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், புகழ்பெற்ற வழக்கறிஞர் மற்றும் அரசியலமைப்பு சபையின் புகழ்பெற்ற உறுப்பினர் – அவருக்கு தேசம் மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறது.
தேசிய ஒருங்கிணைப்புக்கான டாக்டர் முகர்ஜியின் நிலைப்பாடு, பாரதத்தின் ஒற்றுமைக்கான அவரது ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு மற்றும் தேசத்தின் மீதான அவரது தன்னலமற்ற பக்தி ஆகியவை குடிமக்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாகும், இது நமது மகத்தான தேசத்தின் சேவையில் ஒருமைப்பாடு, தைரியம் மற்றும் தேசபக்தியின் கொள்கைகளை நிலைநிறுத்த நமக்குக் கற்பிக்கிறது என தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், சிறந்த சிந்தனைத் தலைவர், கல்வியாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியை இன்று அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறோம்.
சுதந்திர இயக்கம், கல்வி மற்றும் தன்னம்பிக்கை இந்தியா என்ற கருத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு நம் நாடு முழுவதும் தேசியவாத கொள்கைகளை தொடர்ந்து ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனரும் அதன் முதல் தலைவருமான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் பிறந்த தினம் இன்று. 1901 ஆம் ஆண்டு ஜூலை 6 அன்று கொல்கத்தாவில் பிறந்தார்.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, 1926 ஆம் ஆண்டு, செனட்டில் உறுப்பினரானார். 1927 ஆம் ஆண்டில், பாரிஸ்டராக தேர்ச்சி பெற்றார். 33 வயதில், தான் படித்த கொல்கத்தா பல்கலைக்கழகத் துணை வேந்தரானார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று விரும்பினார், சியாமா பிரசாத் முகர்ஜி. இந்தியா ஒரே நாடு. இதற்கு இருவேறு சட்டங்கள் இருக்க முடியாது.
நம் நாட்டில் உள்ள ஒரு மாநிலத்துக்குச் செல்ல அனுமதி கேட்க வேண்டும் என்ற நிலையை ஏற்க முடியாது என்று தொடர்ந்து கூறி வந்தார். காஷ்மீரை, இந்தியாவுடன் முழுமையாக இணைக்க வேண்டும் என்று கனவு கண்டார். இவருடைய கனவு, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால், 2019 ஆம் ஆண்டு நிஜமானது. இன்றைய நாளில் திரு.சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவைப் போற்றுவோம் என கூறியுள்ளார்.