வ.உ.சி கனவு கண்ட சுதேசி இயக்கத்தை பிரதமர் மோடி நிறைவேற்றி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் எழுதிய கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வரலாற்று நூல் வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், முன்னாள் எம்.பி ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் எல்.முருகன், வ.உ.சி கனவு கண்ட சுதேசி இயக்கத்தை பிரதமர் மோடி நிறைவேற்றி வருவதாகவும் அவரது புகழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல ஜே.எஸ்.ராஜ்குமார் எழுதிய நூல் உதவும் எனவும் கூறினார்