திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் விதியை மீறி ஒருவழிச் சாலையில் எதிர்புறமாக வந்தார்.
இதனால், அவ்வழியாக 2 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் பைக்கில் சென்ற நபர் திடீரென பிரேக் போட்ட நிலையில், பின்னால் வந்த லாரி அவர்கள் மீது மோதியது.
நல்வாய்ப்பாக 4 பேரும் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.