திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் புனித நீருக்குப் பதிலாக, சாதாரண கேன் தண்ணீரை ட்ரோன்கள் மூலம் தெளித்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தைக் காண்பதற்காகத் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
கும்பாபிஷேகத்திற்குப் பிறகு புனித நீர் தெளிக்கப்படுமெனப் பக்தர்கள் காத்திருந்தனர். ஆனால், சாதாரண கேன் தண்ணீருடன் வாசனைத் திரவியத்தைக் கலந்து ட்ரோன்கள் மூலம் தெளிக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.