தெலுங்கானாவில் தனியார் நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும், வாராந்திர வேலை நேரம் 48 மணி நேர வரம்பைத் தாண்டக் கூடாது என்ற விதிமுறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தொடர்ச்சியாக 6 மணி நேரம் வேலை செய்த பிறகு, குறைந்தபட்சம் 30 நிமிட இடைவேளை வழங்கப்பட வேண்டும் என்று இந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் இதேபோன்று 10 மணி நேர வேலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.