பீகார் மாநிலம் நாளந்தாவில் இரு குழுக்களிடையே நிகழ்ந்த மோதலின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாளந்தா மாவட்டம் தும்ரவன் கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
அப்போது ஒரு தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதில் அனு மற்றும் ஹிமான்ஷு என்ற இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.