மதுரையில் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்த தந்தை, மகனை வீடு தேடி சென்று போதை இளைஞர்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த பாண்டி, அவரது மகன் கார்த்திக் ஆகியோர் கஞ்சா விற்பனை குறித்து போலீசில் புகாரளித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த கஞ்சா விற்பனை செய்யும் காவாலிமுத்து, கிரைம் பாலா, சிக்காம் சரவணன், அட்டோரி ஆகியோர் சோலை அழகாபுரத்துக்குச் சென்றுள்ளனர்.
பின்னர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு புகாரளித்த பாண்டி, அவரது மகன் கார்த்திக் ஆகிய இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், கஞ்சா விற்பனை குறித்து புகார் அளிக்கக் கூடாது எனவும் அங்கிருந்த பொதுமக்களை மிரட்டிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து தாக்குதலில் பாதிக்கப்பட்ட தந்தை, மகன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஜெய்ஹிந்த்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், போதை இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.