சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டத்தில் இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் அடுத்த வாரம் தேரோட்டம் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நடைபெற்ற தேர் வெள்ளோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
விழாவின் ஒரு பகுதியாக, இந்து முன்னணி அமைப்பினர் ஏற்பாட்டின் பேரில் 30க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம் அடித்தனர்.
இதைத்தொடர்ந்து பல்வேறு தெய்வங்களின் வேடம் தரித்து கலைஞர்கள் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.