பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ட்யூட் படத்தை 25 கோடி ரூபாய் கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது.
லவ் டுடே, டிராகன் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
அடுத்ததாகச் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ ஆகியோர் நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை வெளியீட்டிற்கு முன்பே படத்தின் டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமையை 25 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது.
வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ட்யூட் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.