கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே, பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில், உயிரிழந்த 2 மாணவர்களின் குடும்பத்திற்கு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற வேன் இரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் பலியாகியுள்ளதாகவும், இன்னும் சில குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன என்று நயினார் நாகேந்திரத்தின் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்த குழந்தைகள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
யாராலும் ஈடுகட்ட முடியாத இந்த பேரிழப்பிலிருந்து மீண்டு வர பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அந்த இறைவன் துணை நிற்கட்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.