திருப்பூரில் ரிதன்யாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற மௌன அஞ்சலி நிகழ்வில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ரிதன்யா என்பவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அவரது மரணத்திற்கு நீதி கேட்டு அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு மௌன அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரிதன்யாவின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.