ஏற்காடு சின்னமத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் சரிவர வருவதில்லை என்று குற்றஞ்சாட்டி, மாணவர்களின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டனர்.
ஆங்கில வகுப்புக்கான ஆசிரியர் முறையாகப் பள்ளிக்கு வராததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், எனவே நிரந்தர ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் பெற்றோர் வலியுறுத்தினர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தலைமை ஆசிரியர் உறுதி அளித்ததால் மாணவர்களின் பெற்றோர் கலைந்து சென்றனர்.