நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, பந்தயச் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியின்போது குடிமராமத்து பணிகள் மூலம் அணைகள் தூர்வாரப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், திமுக ஆட்சியில் அணைகள் புனரமைக்கப்படவில்லை என்றும், சிறுவாணி அணை இன்னும் புனரமைக்கப்படாமல் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
திமுக அரசு கடன் வாங்கியது தொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் கூறினார்.